கீழ்கண்டவற்றில் எந்த ஒரு செயலும் நமது கணிணி “ஸ்பாம்” (SPAM) தாக்குதலுக்கு உட்படக் காரணமாகலாம். 1. இணைய தளத்தில், சில தேவையில்லாத தளங்களுக்குச் சென்று “BROWSE” செய்து வருவது. 2. பாலின செய்திகள் அல்லது அது குறித்த படங்களைப் பார்க்க, ஏதேனும் தளத்தில் நமது மின் முகவரியினைக் கொடுத்து விடுவது. 3. முன்பின் அறியாத இணையதளத்தில் அல்லது நபர்களிடம் நமது மின் முகவரியினைத் தருவது. 4. VIRUS பரவியதால் செயற்குறைபாடுடைய கணிணியிலிருந்து “Floppy Disk”, குறுந்தகடுகள் (Compact Disk) அல்லது வேறு ஏதேனும் ஒரு வகையில் செய்திகள், படங்கள் மற்றும் புள்ளி விவரங்களை பிரதி (Copy) எடுத்து நமது கணிணிக்கு மாற்றுவது. 5. கடவுள் பற்றிய நமது பக்தி அல்லது பயம், இவற்றைத் தவறாகப் பயன்படுத்தும் வகையில், இவற்றின் படங்களை மின்னஞ்சல் மூலம் நமக்கு அனுப்பி பலருக்கும் இத்தனை நாட்களுக்குள் அனுப்பாவிடில், பெரிய தீமை உண்டாகும் என்று பயமுறுத்தும் அல்லது அனுப்பினால் நண்மை உண்டாகுமென்று உக்குவிக்கும் “தொடர் மின்னஞ்சலில்” தொக்கி நிற்கும் VIRUS PROGRAM அல்லது “COOKIES மூலமும் இது சாத்தியமாகலாம். இந்த வகையில் நம்மையறியாமலே “ஸ்பாம்” ...