Talks Pranav Mistry: The thrilling potential of SixthSense technology

Talks Pranav Mistry: The thrilling potential of SixthSense technology

ஒரு காகிதத்தை கம்ப்யூட்டராக இயக்க முடியுமா?

செல்போன், கேமரா பயன்படுத்தாமல் ஃபோட்டோ எடுக்க முடியுமா?

இப்படி கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயங்களைச் சாத்தியம் என்று கூறுவதுதான் பிரணவ் மிஸ்ட்ரி என்ற 28 வயது இந்திய இளைஞனின் வியத்தகு கண்டுபிடிப்பான 'சிக்ஸ்த்சென்ஸ்' டெக்னாலஜி'!

யார் இந்த பிரணவ் மிஸ்ட்ரி?

எம்.ஐ.டி.யின் (MIT-Massachusetts Institute of Technology) பிஎச்.டி மாணவரான பிரணவ் மிஸ்டிரி, ஐ.ஐ.டி.யில் பட்டம் பெற்றவர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திலும் ஆய்வாளராக பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அன்றாட வாழ்க்கையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை இரண்டறக் கலக்கும் வகையில் சிக்ஸ்த்சென்ஸ் டெக்னாலஜியை கண்டுபிடித்துள்ளார்.

நம் உடலில் பொருத்திக் கொள்ளக் கூடிய சிறு சிறு கருவிகளின் வாயிலாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை நினைத்த நேரத்தில் பயன்படுத்தி பயனடைய வழிவகை செய்யும் இந்த கண்டுபிடிப்பு தான் இன்றைய தேதியில் டிஜிட்டல் உலகில் ஹாட் டாபிக்!

பிரணவ் மிஸ்ட்ரியின் டெட் இந்தியா (TED India- Technology, Entertainment and Development) அமைப்பின் முதல் மாநாடு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, இம்மாதம் இரண்டாம் வாரத்தில் மைசூரில் டெட் இந்தியாவின் மாநாடு நடைபெற்றது.

அதில் தனது கண்டுபிடிப்புகள் பற்றி செயல்முறை விளக்கம் செய்து காண்பித்து, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார், பிரணவ் மிஸ்ட்ரி.


ஒரு வெள்ளைக் காகிதத் தாளின் நுனியில் மைக்ரோபோனைப் பொருத்தி, அதனை கம்ப்யூட்டராக இயக்கியவர், அதிலே 3டி கேம்ஸ் விளையாடிய போது பார்வையாளர்கள் சீட்டின் நுனிக்கு வந்தனர். அந்தக் காகிதத்தில் திரைப்படம் பார்த்தவர், அருகிலிருந்த கம்ப்யூட்டரில் உள்ள இரண்டு பத்தி எழுத்துகளை அப்படியே காகிதத்தில் எடுத்து வைத்தது அனைவரையும் சிலிர்க்க வைத்தது.

அதேபோல் கையில் சில மைக்ரோ கருவிகளை மட்டுமே பொருத்திக் கொண்டு புகைப்படம் எடுப்பது, புத்தக கடைக்குச் சென்று ஒரு புத்தகத்தைப் பற்றிய விமர்சனம் உள்ளிட்ட விவரங்களை அந்தப் புத்தக பக்கங்களிலேயே இன்டர்நெட்டை இயக்கி பார்ப்பது என பல விஷயங்களும் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க்கின் சைன்ஸ்ஃபிக்ஷன் படங்களில் வரும் அதிசயங்களை நேரில் காணும் பிரமிப்பு ஏற்படுகிறது, பிரணவ் மிஸ்ட்ரியின் டெமோவைக் கண்டபோது!

இதில் அனைவரையும் அசரவைத்த அம்சம்... "இந்த சிக்ஸ்த்சென்ஸ் தொழில்நுட்பத்தை ஒரு மாத காலத்தில் மக்களுக்கு ஓபன் சோர்ஸ்சில் இலவசமாக வழங்கப்போகிறேன்," என பிரணவ் மிஸ்ட்ரி அறிவித்ததுதான்!

பிரணவ் மிஸ்ட்ரியின் டெமோவைப் பார்க்க...

Thanks to : youthful.vikatan



Comments

Popular posts from this blog